வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

அன்புள்ள வித்யா சாகருக்கு,

அன்புள்ள வித்தியா சாகருக்கு,

பதிவில் உங்கல் பதில் பார்த்தேன்
https://www.facebook.com/vidhya.sagar.9210256/posts/1587504994820615
துரோகங்கள், இரண்டு பக்கமும் உண்டு, அதனால் வலிகளும் , துக்கங்களூம் இரண்டு பக்கமும் உண்டு, உங்கள்  வலி உண்மையாந்து, மறக்க, மறைக்க , மறுக்க முடியாதது தான்.

ஆனால் அது நேற்று என்ன தான் அழுதாலும் மாண்டவர் மீளார் என்பது போல
என்ன தான் நினைத்து வருந்தினாலும் அந்த நாள் திரும்பாது,
https://www.facebook.com/photo.php?fbid=1586833834887731&set=a.1528310350740080.1073741832.100006833881065&type=1

பார்க்கும்போது கடந்த காலத்திலேயே வாழ்கிறீர் போல தெரிகிறது, அதுவும் உதிரி பூக்கள் படத்தில் வரும் வில்லன் விஜ்யன் போன்ற குரோத உணர்ச்சியுடன்.

அதில் வரும் பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றதும் அவளை நிர்வாணமாக்கி பர்த்துவிட்டு, இனி எப்போது உண் கனவனனு சேர்ந்தாலும் என் நினைவு உனக்கு என்பார் வில்லன். கிட்டத்தாட அது போன்ற நிலை இது.

குரோதம் கோபமும் அமிலம் போல அதை எங்கே பட்டலும் பட்ட இடத்தை அழிக்கும் ஆனால் அது வைத்திருக்கும் இடத்ததை பாதிக்கவே செய்யும், யாரிடம் கோபமோ அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு வாழ் நாள் முழுவதும் கிடக்ககாமலே போகலாம். ஆனால் கோபம் கண்டிப்பாக இருக்கும் இடத்தை பாதித்தே தீரும்.
கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வீணாக்கினால்,  எதிர்காலத்தில் நம்மை தான் நாம் குறை சொல்லி கொள்ள முடியும். இன்றைய நேற்றுக்கு ஒருவரை பொறுப்பாளி ஆக்கலாம், ஆனால் நாளைய நேற்றான் இன்றுகு நாம் பொறுப்பு ஏற்று நம்மை மாற்றிகொள்ளா விட்டால் நாளைக்கு யாரை குற்றம் சொல்ல முடியும் ?
இப்படி நினைத்து நினைத்து பர்த்தேன் என்று இருப்பவரை அடைய அவருக்கு கொடுத்து வைககவில்லை என்பதெ உண்மை என உணரவும்.

இன்று புதிய நாள் புதிதாக துவக்குங்கள் புதிய துணையுடன் புதிதாக ...
வாழ்த்துகளுடன்
வினோத்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக