சனி, 7 பிப்ரவரி, 2015

'முறையான" கல்வி, அரக்கருக்கு பதில் மரியாதை.

https://www.facebook.com/kilimookku/posts/1621638678055981?comment_id=1621651964721319&offset=0&total_comments=2&notif_t=share_reply

 கிளி மூக்கு அரக்கரின் பதில்வில் அவர் கேட்ட கேள்விக்கு பதிலே இந்த பதிவு
====================
தமிழ்த்தேசிய முலாம் பூசிக்கொண்டு சாதிவெறி பிடித்துத் திரியும் கும்பலும், இஸ்லாத்தின் பேரில் அறிவியலை எதிர்க்கும் வஹாபியிச ஆடுகளும் பிணியரசன் பிணையாத அரசன் என்று ஓவர் நைட்டில் டாக்டர்களாகி இயற்கை மருத்துவம் என்று அவியல் மருத்துவத்தை புத்தகக் கண்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வெட்கமேயில்லாமல் விற்றுக்கொண்டிருக்க, மக்களை இந்தக் கூட்டத்தில் இருந்துக் காப்பாற்ற சக அரக்கன் ஜானகிராமன் போன்றவர்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
டாக்டர் ஜானகிராமன் -உண்மை- இதழில் எழுதிவரும் மரபு வழி -மரண வழியா தொடரின் இரண்டாம் பாகம் இங்கே. http://www.unmaionline.com/…/2435-unmai-magazine-article31.…


  • Vinoth Kumar அரக்கரே, என்னால் இதில் மருத்துவர் ஜானகிராமனின் கருத்துகளுடன் ஒத்துபோக இயலவில்லை. விரைவில் இதற்கு பதில் எழுதப்பார்க்கிறேன்.
    Like · Reply · 1 · 3 hrs
  • கிளிமூக்கு அரக்கன் Vinoth Kumarநீங்கள் முறைப்படி அறிவியல் மருத்துவம் படித்தவரா?
    Like · Reply · 2 · 2 hrs
=========================================

பதிலுக்கு.. இல்லை கேள்விக்கு மிக்க நன்றி, அரக்கரே,

//நீங்கள் முறைப்படி அறிவியல் மருத்துவம் படித்தவரா? //

2 விஷயங்களை நான் பதில் அளிக்க வேண்டும்.

1) மருத்துவம் பற்றி..
நான் 'முறையாக'  மருத்துவம் படிக்கவில்லை. ஆனால் முறையாக மருத்துவ கல்வி, உயர் கல்வி படித்து ஆய்வு ஆய்வுகள் செய்பவரும், மேலும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருப்பவரிடம் உதவியாளராக 3 ஆண்டுகள் இருந்திருக்கின்றேன். அந்த பணிக்காக பல பன்னாட்டு மருத்துவ ஏடுகளை(Medical Journal) படிக்கவேண்டியதும் குறிப்பெடுத்து தரவேண்டியதும் என்னுடைய பணி, இணையத்தில் மருத்துவர்களுக்காக அவர் நடத்திய ஒரு குழும இமெயில் பத்திரிக்யை அவர் சார்பில் கையாளுதல் என் பணிகளில் ஒன்றாக இருந்தது. இன்றும் அது தொடர்பான புதிய (Updates)குறிப்புகள் இப்போதும் எனக்கு வரும்.

மேலும், இப்போது எனது தனிப்பட்ட விருப்பத்துகாக  நானும் என் மனைவியும். அக்குபஞ்சரில் பட்டய படிப்பை அண்ணமலை பல்கலைகளத்தில் படித்துகொண்டு இருக்கின்றொம். http://www.singhaniauniversity.co.in/downloads/syllabusidm.pdf  பாடத்திலும் முந்தய பாடங்களிலும் அனுபவத்திலும் அந்த கட்டுரையுடன் முழுமையாக ஒத்துபோகவில்லை. எனவே  நான் எனது கருத்தை பதிலாக எழுத வேண்டும்.

2) 'முறையாக' பற்றி..
அரக்கரே.. இந்த கல்வி விஷயம் என்பது ரயிலில் அன் ரிசர்வுடு கம்பர்ட்மெண்டில் ஏறுவது போல உள்ளது. சரியாக சொன்னால் கல்வி என்பது விரும்பும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் இங்கே அது அப்படி இல்லை.
இளமையில் வாய்ப்பு அமையபெற்றவருக்கு சிறப்பான கல்வி வாய்ப்பு அவருக்கு தேவைபடாத ஏன் விரும்பத துறைல் கூட கிடைக்கபெறுகின்றது. 

ஆனால் அப்படியான வாய்ப்பு இல்லாமல் ஒரு துறையில் பணி செய்பவர் இன்னொரு துறையில் சுய விருப்பத்துகாக படிக்க நினைதாலும், அதற்கு சட்டம் இடையூறாக உள்ளது. அதாவது கல்வியை கையில் வைத்திருப்பவர், ரயில் பெட்டியில் முன்பு ஏறி இடம் பிடித்தவர் பின்பு ஏறுபவருக்கு இடம் விடாமல் கதவை பூட்டுவது போல யூட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆர்வம் முயற்சியும் இருப்பவருக்கு அனைத்தையும் கற்க அனுமதிப்பதே சரியாகு. மருத்துவம் மக்க்ளின் உயிர் சம்பந்தப்பட்டது எனவே கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று வாதத்திற்காக வைத்துகொண்டாலும், பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை தொடர்வது சட்டம், மற்றூம் பொருளாதாரம்.

ஆறிந்தோ அறியாமலோ செய்யும் செயல் சட்ட விரோதமாக அமைந்தால், அதன் விளைவை, அது அபராதம், சிறை, ஏன் மரண தண்டனையாக இருந்தாலும் சம்பந்த பட்டவர் தலை எழுத்து என்று அனுபவித்தாக வேண்டும். ஆனால் இப்படி தலை எழுத்தை நிர்ணயிக்க கூடிய சட்டத்தை பற்றி அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய மக்களூக்கு எதுவும் தெரியாது.  தெரிந்தால் மம்மளை பாதிக்கும் சட்டங்களை இயற்ற முடியாது, மேலும் சட்டங்லை அதிகாரிகளும் வழக்கறிஞர்களும் சட்டத்தை தவறாக பிரையோகிக்க முடியாது.

நியாயமாக பார்த்தால் ஆரம்ப பள்ள்யில் இருந்தே சட்டமும் ,பொருளாதாரமும் நிர்வாகவியலும் பாடமாக இருக்கவேண்டியவை. ஆர்வம் இருப்பவர்க்கு க்ற்கும் வாய்ப்பை  கொடுத்தால் நாடு மேலும் வளமாகும்.

'முறையாக' என்பது மக்கள் நலம் கருதி ஏற்பத்தப்பட்ட வடிகட்டும் அமைப்புபோல தோன்றினாலும் அதனால் விளையும் நன்மையை விட தீமையே அதிகம். 

அது நன்மை மட்டும் தான் செய்கிறது ,அது தான் சரி என்றால், பல் கலைகளங்கள் அனைத்துமே அறிவியல் ஆய்வுகளிலும் கண்டுபிடிப்புகளிலும் முதன்மை பெறவேண்டும், கல்வியறிவற்றர் என்பரிடம் எதுவும் இருக்க கூடாது.

ஆனால் இங்கு நிலை தலை கீழ்,  பல்கலை களகங்கள் என்பவை தேர்வு நடத்தும் மையங்களாகவும் ஆய்வு பணி என்ப்து சடங்காகவுமே இருக்கின்றது. பல்கலைகளகங்கள் அவற்றின் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட காப்புரிமையை பார்த்தாலே இது தெளிவாக புரியும். 

மனு குலத்தை ஏன் உலகையே பேராழிவில் இருந்து காக்கும் பூகம்பத்தை முன் உணரும் தொழில் நுட்பத்தை படைத்தவர் 'முறைசாரதவர்' என்பதாலும் இந்தியாவில் பிறந்தவர் என்பதாலும் உதாசினப்படுத்தபடுவதை பார்கின்றோம்.  அவர் அதி உயர்  தொழில் நுட்பம் சரியானவர் கையில் கிடைத்தல் சில அணு குண்டுகளை கொண்டு பூகம்பத்தை தடுக்கலாம். மடை மாற்றலாம், உருவாக்கலாம், ஏன் உலகையே பல துண்டாக்கலாம்.  என்ன பயன் ? ஒன்றுமில்லை. அவர் தம் வாழ்வு அழிந்ததே மீதம்.

இதில் தமிழ் தேசியம், இயற்கை மருத்துவம் என்றேலாம் ஏதும் இல்லை என்பது உமக்கே புரியும் என நினைக்கின்றேன். 

சோதிடத்திலும் கல்விக்கு 4ம் இடம். அறிவு அனுபவத்திற்கு.5 மிடம் என்பது நீர் அறிந்தது தாணே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக