புதன், 28 ஜனவரி, 2015

சொந்த கருத்து. பாஜக / மத்திய அரசுக்கு அனுப்ப யோசனைகள் ஒரே கல்லில் பல மாங்காய்.

மத்திய அரசுக்கு அனுப்ப கேட்டு  இருந்தீங்க.அனுப்பி அதை அவங்க செய்தால் சந்தோசம் தான்.  

மக்களூக்கு வேண்டியதை நிறையபேர் அனுப்புவாங்க. ஆனால் அரசுக்கு வேண்டியதை யாராவது அனுப்புவரா என்பது சந்தேகமே. மேலும் மக்களுக்கு வேண்டிய யோசனைகள் செய்லபடுத்தப்படுவதில் தாமதம் நேரலாம்.
ஆனால் அரசின் தேவை அப்படி அல்ல உடனடியாக கவனிக்கப்படும், அதை கொடுப்பவருடைய மதிப்பும கட்சியில் உயரும். தமிழகம் போன்ற கட்சியை வளர்க்க சிரமப்படும் மாநிலத்தில் குறைந்த காலத்தில் பிராந்திய கட்சியை விட வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தினால் உங்களுக்கு என்ன உயர்வு கிடைக்கும் என்பதை நான் சொல்ல வேண்டி இருக்காது.

அரசுக்கு என்ன வேண்டும் ? இந்தியை தொடர்பு மொழியாக இந்தியா முழுவதும் கொண்டுவரனும். அப்போ ஒரே மீடியாவை கொண்டு மக்களை தொடர்பு கொள்ளலாம். வேலை சுலபம் ஆகும்.மாநில கட்சிகளின் வளர்ச்சி குறையும், தேசிய கட்சி கட்டும்பாட்டுக்கு எல்லா மானிலமும் வரும்.ஆனால் அதை செய்வதில் இருக்கும் நடைமுறை தடங்கல்கள் நீங்கள் அறிந்ததே.

ஆகவே, இதற்கொரு தடங்கலற்ற மேலும் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் முறையை பார்க்கலாம்.ஒரு அரசு என்ற நிலையில் அரசாணையாக இந்தியை பள்ளிகளில் கொண்டுவந்தாலும் பள்ளி மாணவர்களயே சென்றடையும். பள்ளி மாணவர் என்பது மக்கள் தொகையில் 15 சதம் இருக்கலாம் அவ்வளவு தான். அவர்களூம் மதிப்பெண்களுக்காக படிப்பர் பின் மறப்பர்.

இதை கட்சி மூலம் மக்கள் இயக்கமாக கொண்டு சென்றால், இதற்கென்று நன்கொடை தர பெரிய கைகள் தயாரக இருப்பர். அவர்களளின் பஙகளிப்பை கொண்டு, இரவு நேர பள்ளிகள் துவங்கி பகுதி நேர இந்தி ஆசிரியர்களை ஒவ்வொரு ஊரிலும் , சிற்றூரிலும் நியமிக்கலாம்.  அவர்களை கொண்டு விரும்பும் அனைவருக்கும் இலவசமாக இந்தியை கற்பிக்கலாம். புத்தகம் உட்பட அனைத்தும் இலவசம். தினந்தோரும் மாலை வகுப்பு, முதியோர் கல்வி போல இரவு வகுப்புக்கள், ஞாயிரு விடுமுறை நாள் வகுப்பு என கொடுக்கலாம். போட்டிகள் வைத்து அவற்றில் பரிசு பெறுவோருக்கு கொஞ்சம் பெருமதி உடைய பரிசுகள் தந்தால் பள்ளியில் கட்டாயம் ஆக்குவதை விட விரைவில் 1 - 2 ஆண்டுகளில் இந்தி கற்று விடுவர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

ஆசிரியர்களூக்கு மக்களுடன் தொடர்பு ஏற்பட்டவுடன், கட்சி பணிகளூக்கு அவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.  இது நல்ல திட்டம் என பாரளூமன்றாத்தில் பேசினால் அதற்கு அரசு நிதி ஒதுக்கீடு வழங்கலாம். மேலும் 1 வருடம் கழித்து அவர்களை பகுதி நேர அரசு ஊழியர் பிறகு முழு நேர அரசு ஊழியர் என கொண்டு வந்தால் நாடு முழுவதும் மக்களுடன் நேறடி தொடர்புடைய முழு நேர அரசு ஊழியரான கட்சியை சேர்ந்தவர் இருப்பர், அடுத்தடுத தேர்தல்களில் அதை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் அரசு பணியாளராக வாய்ப்பு உள்ளதால் நியமிக்கப்படுபவர் மிக சிறப்பாக உழைப்பர்.

பார்க்க https://www.facebook.com/rkacu அக்குபஞ்சர் மருந்து போல எந்த செலவுகளும் இல்லாத மருத்துவ முறை. எனவே நடைமுறை செலவு இல்லை இது மட்டுமல்லாமல் மருத்துவர் / ஹீலராக பணி புரிபவர் மட்டும் போதும் என்பதால் எந்த கிராமத்திலும் இதை செயல் படுத்துவதில் சிரமங்கள் இருக்காது. 


இலவசமாக மொழி கற்பிக்கபடுவதால் மற்றும் இலவசை வைத்தியம் கிடைப்பதால் மக்களும் ஈடுபாடு காட்டுவர். மக்களுடன் மத இன வேறுபாடு இல்லாமல் அணுக ஒரு வாய்ப்பாக அமையும். அதனால் தன்னார்வ கட்சி அமைப்பினர் ஆர்வம் காட்டுவர். பொரூகள் நிதி போன்றவற்றை கையாள வாய்ப்பு கிடைப்பதால் அதிகாரத்தை விரும்புபவரும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

இந்த  திட்டத்தில் சேர்ப்வர் பற்றிய விபரங்களை தனி தளத்தில் பதிவு செய்து பராமரித்தால் புத்தகம் முதலான பொருட்களும், வகுப்புகளும் சரியாக நடக்கின்றனவா என்று கண்காணிக்க வசதியாக இருக்கும். மேலும் கட்சிக்கு பல வகையிலும் பயன்படும்.

இது ஒரு நிறுபிக்கப்பட்ட முறை, அறிவொளி திட்டம் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதை
ஒரு ஒப்பீட்க்கு பாருங்கள்.  மிசினரிகள் உலமம் முழுவதையும் கைப்பற்ற பள்ளியையும் மருத்துவத்தையும் கொண்டே சுலபமாக மக்களை அணுகினார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இது கட்சி பணி அதிலும் கல்வி / மருத்துவ பணி என்பதால் எதிர்க்க இயலாது. அப்படியே கேட்டாலும் நீங்களூம் உங்களுக்கு விருப்பமான மொழியை பரப்புங்கள் தடை இல்லை என்று சொன்னால் முடிந்தது. இலவச கல்வி, மருத்துவதை எதிர்ப்பது என்பது அரசியலில் அவர்களே அழித்து கொள்வதாகும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த, தேவைப்படும் வேலை வாய்ப்பை உம். தமிழ், மலையாளம், மராட்டியம் போன்ற வேலை வாய்ப்பு தரக்கடிய மானில மொழிகளை  பயிற்றுவிக பள்ளி துவக்கி ஆசிரியர்களை நியமிக்கலாம்.

ஆக நாடு முழுமையும் இந்தி, நாடு முழுமையும் மக்களுடன் தொடர்புள்ள கட்சி பணியார்கள்,வலுவான கட்சி கட்டுமானம் என ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுவும் கத்தியின்றி ரத்தம் இன்றி எந்த எதிர்ப்பும் இன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக