புதன், 28 ஜனவரி, 2015

சொந்த கருத்து மோடி தேச விரோதி - தேச பக்த பாஜ ஆதரவாளர் கருத்து.


நம்ம சொந்த கருத்து பாஜக வின் வின் தீவிர ஆதரவாளரும் மென் பொருள் தொழில் அதிபருமான அன்பர் திரு சரவண பிரசாத் பால சுப்புரமணியனை உங்களின் பலருக்கும் தெரிந்திருகும்.
https://www.facebook.com/saravanaprasad.balasubramanian?fref=photo

அன்னருடைய பதிவை முக நூலில் பார்க்கையில் நாம் தமிழர் சீமானையும் மிஞ்சும் வகையில் உணர்ச்சி பெருக்குடன் தேச பக்தி பற்றி பதிவுகள் போட்டிருந்தாரு.  அவரின் பதிவு ஒன்றில் அவரிடம் பேசும்போது தான் தெரிந்தது,  தேச பக்தியில் தீவிரமான்வர்னு .

எவ்வளவு தீவிரம்னா.. பிரதமர் மோடியே தேச துரோகினு தேசத்தை விட்டு வெளியேரனும்னு பொருள் பட பேசுறாரு.  ம் அட நம்ம ஊரில் இப்படி ஒருவரா என்று தான் அவரின்  பதிவை பகிர்கிறேன். அவரு ரகு என்ற ஒருவரை திட்டி பதிவு எழுதியிருந்தார் .  இனி பதிவுக்கு..



------------
 https://www.facebook.com/photo.php?fbid=10203690294997153&set=a.2076283265941.2107055.1210768884&type=1



  • Khader Raja இதுவும் ஒரு நல்ல பதிவு தான்.
  • Suresh Tamilarasu ரொம்ப பேசினா ஆப்பு இப்படி தான் வைப்பார்கள்
  • மின்னல் மனிதன் அண்ணே இது பழசு அண்ணே...... இப்ப வழக்கம் போல நல்லா போடுறாரு அப்டேட் பாருங்க அண்ணே
  • Saravanaprasad Balasubramanian சாரி. நாட் இன்டரஸ்டட். நான் என் நாட்டுக்கு எதிரா பேசுறவன் எவனா இருந்தாலும் பாலோவோ இல்ல பிரன்ட்ஷிப்போ வெச்சிக்க மாட்டேன். என் ரத்தம் இந்திய ரத்தம்.
  • மின்னல் மனிதன் சிறைச்சாலை படத்துல வர பிரபு மாதிரி தான் அண்ணா நான்....

    கடைசி வரை தமிழனோட இரத்தம்ன்னு தான் சொல்லுவேன்
  • Saravanaprasad Balasubramanian பீளீஸ். பிரபு'வ கேவலப்படுத்தாத..
  • Vinoth Kumar Saravanaprasad Balasubramanian நாடு என்றால் என்ன ?
  • Saravanaprasad Balasubramanian அடேங்கப்பா...76'ல பொறந்த உங்களுக்கே தெரியலேனா...நாங்க எப்படி உங்களுக்கு புரியவைக்கிறது.
  • Vinoth Kumar வயசு எல்லாம் மேட்டரா ? உங்க பார்வயில் நாடு என்றால் என்ன் ?
  • Vinoth Kumar // சாரி. நாட் இன்டரஸ்டட். நான் என் நாட்டுக்கு எதிரா பேசுறவன் எவனா இருந்தாலும் பாலோவோ இல்ல பிரன்ட்ஷிப்போ வெச்சிக்க மாட்டேன். என் ரத்தம் இந்திய ரத்தம். // அப்பொ இந்த ஸ்டேடஸ் மட்டும் எப்படி கிடைச்சது ?
  • Jiyavudeen Mohamed Misuse panninathukku Mark vacha aappu
  • Vinoth Kumar //சாரி. ,.... நான் என் நாட்டுக்கு ..,..... என் ரத்தம் இந்திய ரத்தம்.// இப்படி பாறை மேல எல்லாம் குதிச்சா மட்டும் போதாது. சொல்லுங்க கமான் நாடு என்றால் என்ன ?S Nanda Venkat
  • Saravanaprasad Balasubramanian இன்டர்நெட் பூரா ஓடிக்கிட்டு இருக்கு இந்த போட்டோ. யாரோ எனக்கு அனுப்புனாங்க. அதை நான் ஷேர் பண்ணேன்.
  • Saravanaprasad Balasubramanian ஆமா..உங்களுக்கு எதுக்குங்க நாட்டை பற்றிய விளக்கம். பள்ளிக்கூடத்துலே சொல்லிக்கொடுத்தை எல்லாம் மறந்து எவனோ சிங்களனுக்கு வக்காலத்து வாங்குறவங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. ஆனா..நாடுன்னு ஒண்ணு இல்லாம நீங்க தனியா நின்னு சாதிச்சிருங்க. நாங்க பாக்கறோம்..
  • S Nanda Venkat நான் எதாவது சொன்னால் என் மேல "தேசத்துரோகி"ன்னு முத்திரை குத்துவாங்க Mr. Vinoth Kumar

  • ஆப்ப நல்லா இழுத்து சொறுகி விட்டுட்டாங்க போல...😈
    • S Nanda Venkat நாடு ஒன்னு இல்லாம நாங்க சாதிக்க முடியாது. அதே நேரம் அனைத்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நடப்பது தானே ஜனநாயக நாடு திரு. Saravanaprasad Balasubramanian


    ------------------------------------
    இனி நம் பதில்...

    அன்புள்ள இந்த #தம்பி_டீ_இன்னம்_ வரலை moment , கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ..
    ஸ்கூலுல சொன்னங்க காலேஜுல கட் அடுச்சாங்க இதிலெல்லாம் வேண்டாம் , இந்த டக்கால்டி எல்லாம் பல வருசமா பார்த்தது தான்.

    // நான் என் நாட்டுக்கு எதிரா பேசுறவன் எவனா இருந்தாலும் பாலோவோ
    இல்ல பிரன்ட்ஷிப்போ வெச்சிக்க மாட்டேன். //

    இப்படி உணார்சி வசப்பட்டு கழுத்து நரம்பு புடைக்க கத்தும் உங்களுக்கு நாடு என்றால் என்ன என்ற விளக்கம் தெரியலமலா இருக்கும். கமான் சொல்லுங்கள் நாடு என்றால் என்ன ?

    // என் ரத்தம் இந்திய ரத்தம்  //

    அட பாவமே ஏதாவது எமர்ஜென்சினா a , b ரத்‌தம் பிளாட் பாங்கில் இருக்கு.  இப்போ உங்களுக்கு இந்திய ரத்தம் வேற தேடி ஏத்தனும் ஹ்ம் கஷ்டம் தான்.  சரி பரவஇல்லை பார்த்துக்கலாம். இப்படி ரத்தம் முழுவதும் இந்திய இருக்கும்  உங்களுக்கு நாடு என்றால் என்னனு தெரியாத ? இல்லை நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கற ஃப்ராடா ??

    கேள்விக்கு சுலபமான விடை நாடு = மக்கள் அவ்வளவு தான். அதாவது நீங்களும் நானும் தான் நாடு. ஆளே இல்லாத தீவுகள் இருக்கு அதை யாரும் நாடுன்னு சொல்லுறதில்லை. ஆர்டிக் அண்டார்டிக் கண்டங்களே இருக்கு. அதையும் யாரும் சொல்லுறாதில்லை. ஆள் இல்லாத சிறிய தீவுகள் பக்கத்தில் இருக்கும் நாட்டின் கட்டுப்பட்டில் இருக்கலாம். இந்திய குடியரசின் கீழ் அந்த மான் தீவுகள், லட்ச தீவுகள் இருப்பதை போல. ஆனால் நாடு என்ற சொல் நாட்டு மக்களை குறிப்பதே. 

    // ஆமா..உங்களுக்கு எதுக்குங்க நாட்டை பற்றிய விளக்கம். பள்ளிக்கூடத்துலே  சொல்லிக்கொடுத்தை எல்லாம் மறந்து எவனோ சிங்களனுக்கு வக்காலத்து  வாங்குறவங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது //

    சிங்களானு வக்காலத்து வாங்குறது யாரு ? பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சய அழைத்த்தது யாரு ? வெங்கடா போஸ்ட் போஸ்டா ரகுவா இல்லை மோடிய ? இவரூடய ஸ்டேடேமெண்ட் படி தேச விரோதி மோடி தான். 
    இந்த விஷயம் மோடிக்கு தெரியுமா ? திரு சரவண பிரசாத் பால சுப்பிரமணீயம் அவர்களே ?

    // எவனோ சிங்களனுக்கு வக்காலத்து வாங்குறவங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. ஆனா..
    நாடுன்னு ஒண்ணு இல்லாம நீங்க தனியா நின்னு சாதிச்சிருங்க. நாங்க பாக்கறோம்.. //

    அய்யயோ.. முதலில் இவர் சொன்னபடி பார்த்தால் இவரு மோடிக்கு ஓட்டு போட மாட்டர் போல இருக்கே.
    ஓ அதனால் தான் அரை டஜன் ஒரு டஜன் புதுசா குழந்தை பெற சொல்லி  சொல்லுறாங்களொ ? சிங்களவனுக்கு வக்காலத்து இங்கே வாங்கியவர்னு யாரும் இல்லை, 2009 இன அழிப்பு போரில் கவர் வாங்கிய சில ஊடகங்கள் இருக்குனு கேள்விப்பட்டேன். ஆனா 2013  ஐநா சபை மனித உரிமை தீர்மானத்தில் சிங்களனுக்கு வாக்காலத்து வாங்கியது காங்கிரஸ் அரசு. 2002ம் ஆண்டு சிங்கள ராணுவ வீரர்களை புலிகளால் வளைக்கப்படபோது சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க்யது சாட்த் சாட்த் இதே சொந்த கருத்து பாஜக அரசு தான்.
    இவரு ஏன் இப்படி ஆதரிக்கர கட்சிய திட்டுறாரு, ஒருவேளை இவரு பாஜக தான் ஆனா அத்வானி கோஷ்டியா இருப்பாரோ ?  பாஜ மேலிடம் கவனிக்க. 
     
    ராஜபக்சயை அழைத்த மோடி, சுஸ்மா சுவராஜ் ,  லங்க ரத்தினா இந்து ராம்  ஏன் மெட்ராஸ் கபே நடிக்க ஜான் ஆபிரகாம்  எல்லாரையும் நாடுனு ஒன்னு இல்லாம தனிய நிக்க வைக்குறார் அதாவது நாடு கடததுறார்.
    யப்பா மோடி பிரதமர் சுஷ்மா அமைக்கர் , #இப்படி_பண்றீகளே_மா mOment

    இவரு சுத்தி வளைச்சு மோதிய அனுப்பிச்சுடு ஆட்சிய பிடிக்க நினைக்குறாரா ? நல்ல ஆதரவாளர்.

    மத்திய அரசை பொறுத்தவரை தமிழ 'நாடு' என்பது அனைத்து தேசிய கட்சிகளுக்கும் வெளிநாடு தான்.நன்றி கிளிமூக்கு அரக்கன் " https://www.facebook.com/kilimookku/posts/1610233545863161  "காவிரி , கூடங்கூளம், முல்லை பெரியார், நீயுட்ரினோ கெயில் என அனைத்தில் தேசிய கட்சிகள் கருநாடகா , கேரளா என அவர்கள் இந்திய மாநிலமாக கருதும் மாநிலத்தையே ஆதரிப்பார். இப்போதும் அதுவே தான். இங்கே மாநில கட்சியுடன் கூட்டணி வைத்து 25 எம்பி கிடைத்தல் போதும் என்பது அவர்கள் நிலைப்பாடு.

    இப்போ யோசிங்க நாம் வீட்டில் ஒரு விழா என்றால், பக்கத்து வீடு எதிர்த்த வீடு உற்றார் உறவினர் அனைவரையயும் அழைப்போம் இல்லியா ? ஈதோ தெருவில் போகும் நாடோடிக்கு நாம் வீட்டு வாசலில் போனால் போகிறது என்று படுக்க இடம் கொடுக்கிறோம். அந்த நாடோடிக்கும் பக்கத்து நமது வீட்டுக்காரருக்கும் பிரச்சனை என்பதால் நாம் நமது வீட்டுக் விழாவுக்கு பக்கத்து வீட்டு காரரை அழைக்காமல் இருப்போமா ?

    அந்த பக்கத்து வீட்டுக்காரர் நிலையில் தான் ராஜாபாக்ஷாவும் ,  இடம் அற்ற நாடோடி நிலையில் தான் தமிழக மக்களும் இருக்கின்றனர். தமிழ் ஈழம் என்று இல்லை, காவிரி பிரச்சாணியில் மத்திய அரக்கு கர்நாடகம் பக்கம் முடிவு எடுக்கும், முல்லை பெரியாரில் கேரள பக்கம், பாலற்றில் ஆந்திரந்தின் மீனவர் துப்பாக்கி சூட்டில் இலங்கை பக்கம் என்று எப்போதும் நிலையாக தமிழக எதிர்ப்பு நிலை தான் மத்திய அரசு நிலை, எந்த ஆட்சி வந்தாலும் இது மாறாது.
    தமிழாகத்தை தொடந்து எம் பி பெறுவதற்கும் அணு உலை நியூட்ரினோ  போன்ற மாசு குப்பை கொட்டுவதற்கும் தான் பயன் படுத்துகின்றது மத்தி.

    கேள்விக்கு இப்படி சுத்த காரணம் ரொம்ப சுலபம் தான். ஆனாஇவருக்கு பிறச்சணயே அது தான். மக்கள்தான் நாடுன்ணா மக்கள் விரோத கொள்கையை செயல்படுத்தும் யாரும் அது அரசனாலும் தேச பக்திய இல்லை தேச விரோதமானு மக்கள் தான் சொல்லணும்.

    கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் தருவோம் சொல்லி ஓட்டு வாங்கிட்டு மக்களை ஏமாற்றுவது யார் ?காஸ் விலை பெட்ரோல் விலை எல்லாம் எல்லாக்கும் தெரிந்த யாரும் பதில் தராத பிரச்னை. மொழி திணிப்பது யார் ? பொது வினையோக முறையை ஒழித்து பல ஏழைகளை பட்டினி போட போவது யார் ?

    இதோ அணு உலை வெடிப்பு விப்பது ஏற்பட்டால் அதை விற்று கொள்ளை லாபம் பார்த்த நிறுவனம்
    10 பைசா தர வேண்டாம் , கொல்லப்பட்ட பாதிப்படைந்த மக்களுக்கும் இழப்பீடு அதே மக்களின் வரி பணத்தில் இன்ஸூரன்சு செய்யப்டும் என்று  ஒபாமாவுடன் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்தி. இதன் பின் இருப்பத் யார் ?

    அந்த இன்ஸுரன்ஷும் தனியார் மயம் ஆகுது. தனியார் லாபத்தை கணக்கிடுவான மக்களாய் கவனிப்பான ?
    இனி கூடங்குளம் வெடித்தாலும் மக்கள் அந்த வெடிப்பினால் தான் செத்தார்கள் என்று நிரூபிக்க வேண்டும் 
    செத்தவனே வந்து இந்த அணு உலை விபத்தால் இறந்தேன் என்று நிறுபிக்க வேண்டும் என்று  கூட கேட்கலாம்.
    நியீட்ரிநோ உட்பட அனைத்துக்கும் இனி இது தான் விதி. 

    மக்களும் லேசுசப்பட்டவர்கள் அல்ல, இன்றைய மருத்துவமனை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் இருக்கும் சுய நலத்துக்கும் அதை செய்ல்படுத்த பயன்படும் இன. மத. சாதி. வர்க்க. நிற. பால் பேதங்களை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுகொண்டு அதை கொண்டு தனக்கு கீழ் இருப்பவனை மனசாட்சி இல்லாமல் சுரண்டி, அதன் பலன்களையும் அனுபவித்து கொண்டு, நாடு கெட்டு குட்டிசுவரா போச்சு என்பவர்கள் தான் மக்கள். 

     இந்த மக்களை நம்பி பொது காரியத்தில் ஈடுபடுவது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல..அதுவும் சுடாத பச்சை மண் குதிரையை. தன் மனசாட்சி பொறுக்காமல் லஞ்சம், ஆள் கடத்தல், மணல் கொள்ளை என்று பொது பிரச்சனையை எதிர்ப்பவரை கொன்று தள்ளூம்போதும் நமக்கு என்ன என்று அமைதி காப்பவரே  மக்கள். 

     மேலும் @வெங்கட்  https://www.facebook.com/snanda.venkat.9?fref=ufi  அயோக்கியர்கள் கடைசி புகலிடம் தேசியம் என்பது அரசியல் நியதி.  என்பார் சாமுவேல் ஜான்சன். பெரியாரின் மேற்கோளூம் கூட.

    என்ன வேண்டுமானாலும் செய்துக்கொண்டு  கடைசியில் பிரச்சனை என்றால் நாட்டு நலன் என்று சொல்லிவிடலாம் ஏன் என்று கேட்பவரை தேச துரோகி என்று  சொல்லலாம் என்பது தான் இவரின் தேச பக்தி.

    கவுண்டமணி செந்தில் காமெடில் வர மாதிரி எது வந்தாலும் பார்த்துக்க இளிச்சவாய் நாடு இருக்கில.
    மக்கள் அனைவரும் இந்த சின்ன கேள்வி கேட்டால் போதும் இவர் மட்டுமல்லநாட்டின் பெயரை சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது.

    ஆனால் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக