செவ்வாய், 27 ஜனவரி, 2015

நொந்த கருத்து மூடிக்கொண்டு இருங்கள் - மோடியால் இந்தியாவை திருத்த முடியாது

அன்பர் மூடிக்கொண்டு இருக்க சொன்னதால் என்னவென்ரு விசாரிக்க சென்றேன்.
 https://www.facebook.com/lalithasnarayanan/posts/820997594614981
16 hrs ·
பத்து ரூபா டிக்கட்டு எடுத்து பக்கத்து ஊரு திருவிழாவுக்கே போகாத பலபேர் இந்த பேஸ்புக்கில்....
மோதி - ஓபாமா சந்திப்பு குறித்து வக்கணையாக என்னென்னவோ கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
சிலதெல்லாம் அருவருப்பாய் இருக்கு....
சிலதெல்லாம் ஏண்டா கண்ணால பாத்தோம்னு இருக்கு....
பலதெல்லாம் சீனப்பெருஞ்சுவற்றில் வைத்து கொளுத்த வேண்டும் போல் இருக்கிறது............
இன்னும் சிலதெல்லாம்.... சவூதி பாலைவனத்தில் தகிக்க விடனும் போல இருக்கு!!
ஐயா.... பேஸ்புக் வீரர்களே....
முதலில் நம் தமிழ் நாட்டை சுற்றிப் பாருங்கள்.... அடுத்து .... பக்கத்து மாநிலங்களுக்கு போய் வாருங்கள்..... அடுத்து.... நல்ல பெரியோர்களுடனான நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.... அடுத்து.... நல்ல நல்ல நூல்களை பொருளறிந்து படிக்க கற்றுக்கொள்ளுங்கள்....
உள்ளுக்குள் ஒரு தெளிவு பிறக்கும்.
சிலதுக்குத்தான் உங்கள் வாயும் திறக்கும்!!
மற்றவற்றுக்கு மூடிக்கிட்டுத்தான் கொஞ்ச நாள் இருங்களேன்!!?

அன்பர் மூடிக்கொண்டு இருக்க சொன்னதால் என்னவென்ரு விசாரிக்க சென்றேன்.

Vinoth Kumar "அதாவது ஏன்னு யாரும் எப்பவும் எதுக்கும் கேட்டுர கூடாது. நான் என்ன செய்தாலும் அது தான் சரி அப்படீன்னு வெவரமா சொல்லிக்குடுங்க. இது தெரியாம ஏதோ எழுத்துரிமைன்னு எவனோ அரசியல் சட்டமாமே அதுல எழுதீட்டானாம். அத இவுக கேப்பாங்களாம். இந்த அறிவெல்லாம் அப்போ எப்போ ஓட்டு போடுறதுக்கு முன்னாடி இருந்திருக்கனுக்.இப்பொ பேசி என்ன உபயோகம்? நாங்க அப்படித்தான் புடிச்சா இரு இல்லை உனக்கு பிடிக்கர நாட்டுக்கு ஓடிப்போ . இதுக்கெல்லாம் பதில் சொல்லனும என்ன " அப்படின்னு சொல்லீறலாம் விடுங்கன்னே இதுக்கு போய் டென்சன் ஆயிட்டு 

Dayalan Deva நல்ல நூல்களை பொருளறிந்து படிக்க !! தெளிவு பிறக்கும் , பிறந்த பின் வாய் திறக்குமா.?
6 hrs · Like
Lalitha S Narayanan வினோத்குமார்..... மோடியின் பல அணுகுமுறைகள் காங்கிரஸின் அணுகுமுறையை விட ஆயிரம் மடங்கு வித்தியாசமானது. அது நல்லதைச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தியா மீதான தவறான பார்வையும், கொள்கையும் மற்ற நாடுகள் கொண்டிருந்ததற்குக் காரணம்... காங்கிரஸி
ன் அடிமைத்தனம்தான்....

மோதியை அவ்வாறு பார்க்க இயலவில்லை. இதுவரை. கம்யூனிச சித்தாந்தம் பேசும் எவரும் இந்தியாவுக்கு நல்லது செய்ததில்லை.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரியும்.

மற்ற கட்சிகளுக்கு நிறையை குறைகளாகக் கண்டுபிடிக்கத் தெரியும்....

என் தேசம் என்ற அக்கறை எனக்கு இருக்கிறது. வந்தவரை வாங்க என்று உபசரித்து தற்கால சூழலுக்கு ஏற்ற நடவடிக்கையை அவருடன் சேர்ந்தே எடுப்பதுதான் நல்லது.

காலதேசவர்த்தமானம்!! என்பது இதுதான்.

பழைய புளி குழம்புக்கு நன்றாக இருக்கும். ஆனால் பழங்கதைகள் நம் நாட்டிற்கு நல்லது செய்யாது. மாறவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மாறவேண்டும்.

Vinoth Kumar //வினோத்குமார்..... மோடியின் பல அணுகுமுறைகள் காங்கிரஸின் அணுகுமுறையை விட ஆயிரம் மடங்கு வித்தியாசமானது. அது நல்லதைச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.// தேர்தலுக்கு முன் இப்படி தான் சொன்னிர்கள் சரி. இப்போது என்ன நடக்கிறது என்பதை தானே இணைப்பில் கொடுதுத்துள்ளேன் ?? அத்ற்கு பதில் சொல்லலாமே? இனி எதிர் காலத்தில் என வெறும் நம்பிக்கை ஊட்டுவதற்ற்கு பதில் , இதை செய்தோம் என்று சொல்ல ஏதேனும் உண்டு என்றால் அது ரயில் கட்டண உயர்வு , காஸ் உயர்வு என்று தானே இருக்கு ? எதிர் காலத்த்தில் ரேசன் கடை மூடல், அணு உலை விபத்து இழப்பீடு போன்ற மக்கள் நலம் பீனா வேண்டியய அனைத்த்திலும் மக்களுக்கு நேர் எதிர் நிலையில்இருக்கிறது அரசு.

http://vitrustu.blogspot.in/2015/01/blog-post_25.html...

https://www.facebook.com/photo.php?fbid=577297295739587&set=a.393135374155781.1073741828.100003779650958&type=1

http://www.thehindu.com/.../ndeal-no.../article6821557.ece

மோடியை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் என்ன செய்ய ? மேற்கண்டவைகளுக்கு என்ன பதில் ? மோடியாய் ஆதரிக்கும் நிங்கள் நம்ப சொல்லும் நிங்கள் இதற்கு பதில் அளியுங்கள்.

மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த்து தான் ஆட்சியை ஆட்சியை பிடித்த்தீர்கள் கருப்பு பணத்தை கொண்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்றது என்னானது ? உங்கள் நம்பிக்கையின் பேரில் உஙக்ளுக்கு ரட்சிப்பு அளிக்க இது என்ன அல்லேலூயா விசுவாச கூட்டமா ?

5 hrs · Like · 3
 Lalitha S Narayanan வினோத் குமார்.... ஶ்ரீகிருஷ்ணன் துவாரகையை ஆண்டபோதும்.... ஶ்ரீ ராமர் அயோத்தியை ஆண்ட போதும் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தன. அந்த பிரச்சனைகளால் ஶ்ரீ கிருஷ்ணனுக்கும், ஶ்ரீ ராமனுக்கும் எந்த இழிவும் வந்துவிடவில்லை. மோதி ஆண்டாலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அவருக்கு முன்பு ஆண்டவர்களுடைய இலட்சணம் அப்படி!!

இந்தியாவை யார் ஆண்டாலும் ஒட்டுமொத்தமாக திருத்த... பல கோடி யுகங்கள் வேண்டும்.

காரணம் நீங்கள் சொன்ன அல்லேலூயா விசுவாசிகளும்.... அண்ணல் நபிகளின் விசுவாசிகளும்தான்....!!

நான் அல்லேலூயா விசுவாசக் கூட்டத்தினன் அல்ல.!! நீங்கள் இருந்தால் எனக்கு ஆட்சேபனையும் ஏதுமில்லை.!!

நீங்கள் சுட்டிக்காட்டியது எல்லாமே மோதிக்கு எதிரான கண்ணோட்டத்துடன் கூடிய கண்ணாடிவழியே பார்த்து பதிவிட்டவை. நம்ப மாட்டேன். அவை குப்பை.
 Vinoth Kumar //காரணம் நீங்கள் சொன்ன அல்லேலூயா விசுவாசிகளும்.... அண்ணல் நபிகளின் விசுவாசிகளும்தான்....!!//

இது தான் திசை திருப்புதல் என்பது மதத்தை காட்டி இன்றைய பிரச்சனையை திசை திருப்ப முடியாது. தினசரி உணவே இனி பிறக்கனை ஆகும்போது மதத்ததை வைத்து கொஞ்ச நாள் ஊட்டலா
ம் அவ்வளவு தான். கரியாக அடுத்த்த வருடம் இதே போல பேசி பாருங்கள் உங்களுக்கு வரும் பதிலை வாதிஊ அடுத்த்த முறை பேச மாட்டிர்கள்

//இந்தியாவை யார் ஆண்டாலும் ஒட்டுமொத்தமாக திருத்த... பல கோடி யுகங்கள் வேண்டும்//
இதை தேர்தலுக்கு முன் சொல்லி இருக்கலாமே ? இப்பவும் ஒன்னும் கேட்டு போகலை. பல கோடியாம் யுகங்கள் எல்லாம் வேண்டாம். சரியாய் 6 மாசம் போதும். மோடியால முடியலைனா மோடியை ராஜினாமா பன்னாட்டு மறு தேர்தல் வைக்க சொல்லுங்க.

//நான் அல்லேலூயா விசுவாசக் கூட்டத்தினன் அல்ல.!! நீங்கள் இருந்தால் எனக்கு ஆட்சேபனையும் ஏதுமில்லை.!!//
ஒ அப்படி ஆட்சேபிக்கவும் திட்டம் இருக்கா ? நிங்கள் அல்லாஎழுயாவை தான் நம்பாவேதும் என்பதிலை ராமனை கிருஷனை நம்பினாலும் அதே நிலை தான்.தொடர்ந்து வரும் விலை ஏற்றத்தில் பணம் நாம் தான் கொடுக்க வேண்டும தவிர எந்த கடவுளும் திரப்போவது இல்லை.

//நீங்கள் சுட்டிக்காட்டியது எல்லாமே மோதிக்கு எதிரான கண்ணோட்டத்துடன் கூடிய கண்ணாடிவழியே பார்த்து பதிவிட்டவை. நம்ப மாட்டேன். அவை குப்பை.//
காஸ் விலை உயர்த்து விட்டது என்று சொன்னது மோதிக்கு எதிரான குப்பையா... அட பாவமே எங்க வீட்டுக்கு வர காஸ் டெலிவரி பாய் மோடிக்கு எதிர தான் செயல் படுறாரா ? அப்ப காஸ் விலை ஏற்றப்பது மோடித்க்கு தெரியாத ? நாட்டில் என்ன நாடகுத்துனு கூட தெரியாமா தான் மோடி இருக்கார் அப்படியா ? அப்படியானல் பிரதமர் பதவிக்கான தகுதி மோடிக்கு இல்லயே ? தன்னால் முடியாததை செய்வதை விட விட்டுவிட்டால் வேறு யாராவது செய்யலாமே ?

இல்லை காஸ் விலை கூடதவில்லயா ? எது நிஜம் ?

உண்மை என்ன என்பது உஙகளுக்கும் தெரியும். அது உங்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும். அதை ஒப்பு கொள்ளப்போவத்திலை என்பதும் தெரியும். ஏனனில் யார் செத்‌தால எனக்கென்ன எப்படியும் பாஜக வை பரப்பி ஆதாயம் தேடுவதே உங்கள் நோக்கம்.

மோடியால் வருவது காங் மக்களுக்கு தந்ததை விட அதிக பட்ச இழப்பே. அதற்கான ஆதாரங்கே மேலே உள்ளவை. அதை மறுக்க முடியதலால் உங்கள் நம்பிக்கை பற்ரி பேசுகிரீர்.
 Lalitha S Narayanan வினோத் குமார்..... விலை ஏற்றம் என்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் அதிகமாக வாதம் பண்ணி விமர்சனம் செய்தே பழக்கப்பட்டவர் என்பது உங்களது பதிலுரையில் தெரிகிறது. வாழ்த்துக்கள். அதுதான் அறிவை வளர்க்கும்!!

தவிர, நான் பாஜக காரன் அல்ல, பாஜக அனுதாபியும் அல்ல. என் ஆயுளில் நான் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு மோடியை பெரிதும் நம்புகிறேன்.

நிர்வாக சிக்கல், அரசியல் அநாகரீகம், இதுவரை பழக்கப்பட்டுப்போன லஞ்ச லாவண்யங்கள், பொறுப்பின்மை.... இன்னமாதிரியான அட்டூழியங்கள் எல்லா துறைகளிலும் ஊடுறுவிவிட்டது. ஒரு பிரதமரால் ஐந்து வருட காலக்கட்டத்துள் இதை நிவர்த்தி செய்திட முடியாது.

மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம்.

நான் உங்கள் விவாத - விமர்சனத்துக்குப் பதில் சொல்லுவதாக நினைக்க வேண்டாம். நான் வாதத்தில் விருப்பமில்லாத ஆள்.

எனக்கு ஒரு அபிப்ராயம் ஒருவர் மீது ஒரு காரணத்தால் உண்டாகிறது என்றால்,அது தப்பு.... நீ உடனே மாத்திக்கோ.... இல்லாட்டி ஒதைப்பேன்!! என்பது நல்லதல்ல.

என் அபிப்ராயம் என்பது சம்மந்தப்பட்டவரேமாறினால்தான் மாறும். அதுவரை நீங்களும் பொறுங்களேன்!!?

இதற்கு பதில்... என்று எதையாவது எழுதாதீர்கள். இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்

நீங்கள் நல்லவர் என்பதும் என் அபிப்ராயம் தான். 


நன்றி,  வினோத்.

1 கருத்து:

  1. //தவிர, நான் பாஜக காரன் அல்ல, பாஜக அனுதாபியும் அல்ல. என் ஆயுளில் நான் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு மோடியை பெரிதும் நம்புகிறேன்.//

    ஹ ஹா .. இதெல்லாம் என்ன மாதிரி டிசைன்?

    பதிலளிநீக்கு